மாதவனின் அறிவு

ஓர் ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் பெயர் மாதவன். அவனுக்கு தோசை என்றால் மிகவும் விருப்பம். அவன் ஒரு நாள் தன் தாயிடம் சென்று தனக்கு தோசை வேண்டுமென்றான். அதற்கு அவன் தாய், நான் உடனடியாக செய்ய முடியாது என்று சொன்னார். அதற்கு அவன் ஏன் என்று கேட்டான். அப்பொழுது அவர் தோசை செய்வதென்றால் மாவை புளிக்க வைக்க வேண்டும் என்று சொன்னார். அப்பொழுது அவன் மாவை புளிக்க வைப்பதென்றல் என்ன என்று கேட்டான். அதற்கு அவர் நாம் வைத்த மாவைவிட அரைவாசியாக மா கூட வேண்டும் என்று சொன்னார். அதனால் நான் உனக்கு நாளை தோசை செய்து தருகிறேன் என்று சொன்னார். அதற்கு அவன் ஆம் என்று சொன்னான். பின்னர் அவன் தாய் மாவை புளிக்க வைத்தார். அவன் மா எவ்வாறு புளிக்கிறது என்று பார்த்துக்கொண்டு இருந்தான். இன்னும் மா புளிக்கவில்லை என்று யோசித்தான். பின்னர் சிறு வயதில் அவன் ஆசிரியர் சொன்ன கதை அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது. என்னவென்றால் காகம் தாகத்தினால் தண்ணீரை தேடி அலைந்தபோது, குடத்தில் இருந்த தண்ணீர் எட்டவில்லை என்று கல்லை குடத்தினுள் இட்டு நீரை குடித்தது போல் அவனும் மாவினுள் சிறு கற்களை இட்டு, அவன் அம்மாவிடம் சென்று மா புளித்ததாகச் சொன்னான். அம்மா ஆச்சரியமாக மா புளித்து விட்டதா? என்று கேட்டார். அவன் ஆம் என்று சொன்னான். பின்னர் அம்மா அங்கு சென்று பார்த்தார். பின்னர் அவர் ஒரு கரண்டி எடுத்து மாவை கிண்டினார். பின்னர் மாவினுள் கற்கள் இருப்பதைக் கண்டார்.

                                                                                                      
                                                                                                வேளாஜினி

2 kommentarer:

  1. பாடல்களில் மட்டும்தான் 'மீள்கலவை' (Remix) செய்கிறார்கள் என்றால் கதைகளிலுமா வேளாயினி? எனினும் புதிய முயற்சி! உங்கள் கற்பனைத் திறனுக்கு எனது பாராட்டுக்கள்.

    SvarSlett
  2. செல்வா18. november 2010 kl. 02:48

    உங்கள் கதை நன்றாக உள்ளது.
    நான் உங்களை வாழ்த்துகிறேன்.
    உங்களுக்கு எனது மனம்மார்ந்த பாராட்டுகள்

    SvarSlett