சிறுவர் கதை

நீங்கள் செய்வதும் சொல்வதும் ஒன்றா? 


முன்னொரு காலத்தில் ஒரு பணக்கார குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. அக் குடும்பத்தில் அப்பாவும் அம்மாவும் மாறன் என்ற சிறுவனும் இருந்தார்கள். இவர்கள் எல்லோரும் கடவுள் நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தார்கள். பொய் சொல்லக்கூடாது நேர்மையாக இருக்கவேண்டும் சொல்லுவதையே செய்யவேண்டும் என்றும் மற்றும் வறுமையில் இருப்பவருக்கு கைகொடுக்கவேண்டும் என ஒவ்வொரு நாளும் கடவுளை வழிபட்டு வந்தார்கள். ஒரு நாள் அம்மா மாறனுக்கு புத்தகம் வாசித்துக்கொண்டு இருந்தார். வாசித்துக் கொண்டு இருக்கும் பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது. அம்மா புத்தகத்தை ஓரம் வைத்து கதவை திறந்தார். வாசலில் ஒரு வயதுபோன கண் குருடான ஒரு பிச்சைக்காரன் நின்றான். அந்த மெலிந்த பிச்சைக்காரன் கேட்டான் 'அம்மா அம்மா நான் சாப்பிட்டு நாட்கள் ஆகின்றன. தயவுசெய்து சற்று உணவு தருகின்றீர்களா?' அம்மாவுக்கு கோபம் வந்தது. அம்மா ஏழையான மனிதனைப் பார்த்துப் 'போ போ எனது நேரத்தை வீணாக்காதே' என்று சொல்லித் துரத்தினார்.         
சற்று நேரத்தில் திரும்பவும் கதவு தட்டும் சத்தம் கேட்டது. பிச்சைக்காரன் போல நடிக்கும் ஒரு சோம்பேறியான ஒரு மனிதன் நின்றான். அம்மா இவரை பார்த்ததும் உடனே சமைத்து வைத்த சோற்றை நடிக்கும் பிச்சைக்காரனிடம் கொடுத்தார்.
மாறன் ஆச்சரியமாக அம்மாவைப் பார்த்து கேட்டான். 'ஏன் நீங்கள் அடிக்கடி சொல்லுவதை செய்யவில்லை? உண்மையாக உதவி தேவையான மனிதருக்கு உதவி செய்யவேன்டும்.'
அம்மா கோபத்தில் திரும்பி பார்த்து சொன்னார் 'சொல்லுவதை எப்பொழுதும் செய்யலாமா? போய் படி மாறன் படி!'
மாறனும் கவலையுடன் அப்பாவிடம் சென்று தொலைக்காட்சி பார்தான். பார்துக்கொன்டு இருக்கும் பொழுது மாறனின் வகுப்பில் நன்றாகப் படிக்கக்கூடிய ஒரு சிறுவன் வந்தார். ' அய்யா அய்யா எனக்கு நூரு ரூபாய் தருவீர்களா? இல்லை என்றால் பள்ளிக்கூடம் போக முடியாது'.
அப்பா பாவமாக சிறுவனைப் பார்த்து சொன்னார் 'என்னிடம் இப்பொழுது ஒரு ரூபாய் கூட இல்லை. சிறுவனும் பேசாமல் வீட்டை விட்டு போனார். சுற்று நேரம் கழித்து மூன்று மனிதர்கள் வந்தார்கள். இவர்கள் வந்ததும் அப்பா உள்ளே அழைத்தார்.
'வணக்கம் அய்யா!; நாங்கள் இங்கு வந்து இருப்பதற்கு காரணம் இங்கே ஒரு முக்கிய அரசியல்வாதி முதல் முறையாக இங்கு வருகின்றார். அவர் வந்தபின் நாங்கள் எல்லோருமாக அவருக்கு தங்க மாலை கொடுக்கலாம் என இருக்கின்றேம். உங்களின் கருத்து என்ன அய்யா?'
'இது மிகவும் பாராட்டக் கூடிய ஒரு சிந்தனை. இந்த தங்க மாலை எவ்வளவு ரூபாய் என தெரியுமா?'
'27 000 ரூபாய் அய்யா!'
நான் உங்களுக்கு 15 000 ரூபாய் தருகின்றேன் என்று சொல்லிவிட்டு அப்பா படுக்கை அறையில் இருக்கும் அலுமாரிக்கு சென்றார். மாறன் கதவுக்கு பின்னால் இருந்து ஆச்சரியமாகவும் கவலையாகவும் பார்த்தார். அப்பா பணத்தை கொடுத்து மூன்று மனிதர்களையும் அனுப்பியபின் மாறன் மெதுவாக வந்து கேட்டான. 'அப்பா நீங்கள் அடிக்கடி சொல்லுவதுபோல் ஏன் செய்யவில்லை? ஏன் வந்த சிறுவனுக்கு பணம் கொடுக்காமல் இப்பொழுது வந்த மூன்று மனிதர்களுக்கு கொடுத்தீர்கள்? உங்களுக்கே இது சரியாக இருக்கின்றதா?'
'எப்பொழுதும் சொல்லுவதை செய்யலாமா? உடனே பள்ளிக்கூடத்துக்கு போ மாறன் எனது நேரத்தை வீணாக்காதே!'
மாறனும் எதிர்த்து கதைக்காமல் பள்ளிக்கூடத்திற்கு சென்றான். 



                                                                      தொடரும்!!!! (மாளவி )