செம்மொழியான தமிழ்மொழி

5 kommentarer:

  1. செம்மொழி மாநாட்டுடன் எமக்கு உடன்பாடில்லாவிடினும் தமிழ்மொழி பற்றிய பாடல் புதிய உற்சாகத்தைத் தருகிறது. எங்கள் இணையத்தளத்திற்கும் அழகைத் தருகிறது. இதனை வலையேற்றிய மாளவிக்கு எனது பாராட்டுக்கள். மிகவும் நல்ல முயற்சி. -கேமா

    SvarSlett
  2. வாழ்த்துகள் பிள்ளைகளே !! சிறப்பான முயற்சி !

    SvarSlett
  3. தாயகத்தை விட்டு வெகுதூரத்தில் வாழ்ந்தாலும் உங்கள் தாய்மொழியுடன் தொடர்பைப் பேணிக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. உங்கள் பணி தொடர்ந்து மேலும் மேலும் முன்னேறிச் செல்ல எனது வாழ்த்துக்கள்.

    இ. மயூரநாதன் ஐக்கிய அரபு அமீரகத்தில் (--) இருந்து.

    SvarSlett
  4. உங்களது முயற்சிக்குப் பாராட்டுக்கள். தமிழில் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து எழுதுவதற்கு தூண்டிய ஆசிரியருக்கும், அதனை ஆர்வத்துடன் செய்யும் மாணவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    SvarSlett
  5. இந்த வலைப்பதிவைப் பார்த்து வியந்து போனேன்! வாழ்க உங்கள் தமிழுணர்வு! தமிழ் மொழி வியப்பூட்டும் ஆழம் மிக்கது. நம் மொழியை வளர்க்க வேண்டியது நம் கடமை. கணிதம் அறிவியல், பொறியியல், மருத்துவம், இசை, கலை, சிற்பம், வணிகம் என்று எந்தத் துறையாயினும் தமிழில் நுட்பத்துடன் விளக்கலாம். ஏனெனில் அத்தனை ஆழமான சொல்வளம் கொண்டது தமிழ். எதனையும் நாம் பயன்படுத்தவில்லை எனில் இழக்க நேரிடும். உங்கள் உழைப்பும் ஆர்வமும் என் நெஞ்சினில் இனிப்பை ஊட்டியது. உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

    செல்வா (கனடாவில் வாட்டர்லூ நகரத்தில் இருந்து எழுதுகிறேன்).

    SvarSlett